Mdm Manjula d o Ramasamy
Profile
Mdm Manjula Ramasamy, started teaching Tamil Language (TL) to students in primary schools and Tamil Language and Literature to students in secondary schools. In 2004, she was awarded the ‘Most Inspiring Tamil Teachers Award_’._ She then joined the Curriculum Planning Division of Ministry of Education as a curriculum planning officer developing syllabuses and instructional materials for both the primary and secondary levels. As a Senior Teacher for assessment and pedagogy at Umar Pulavar Tamil Language Centre, she has been involved in the facilitation of professional development training programmes for TL teachers and implementation of the National Elective Tamil Language Programme. Her professional contribution and involvement include the publication of TL teaching resource guidebooks and TL related research papers in international conferences. Her research interests are in enhancing writing skills of students learning TL and developing language skills of students from non-Tamil speaking family background. She believes in being a teacher at heart and teach beyond techniques with a personal identity.
திருவாட்டி மஞ்சுளா ராமசாமி, 2013-ஆம் ஆண்டு முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய இவர், உயர்நிலைப்பள்ளி மாணவருக்கும் தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களையும் கற்பித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு இவருக்குத் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டு, பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்த்துறையில் இவர் பாடத்திட்ட வரைவு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, இவர் தொடக்கநிலை மற்றும் உயர்நிலைகளுக்கான பாடக்கலைத்திட்டங்களை வரைவதிலும் பாடநூல்களின் உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மூத்த ஆசிரியராகப் பணிமேற்கொண்டபோது, இவர் தமிழாசிரியர்களின் பணி மேம்பாட்டுத் திட்டங்களையும் தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளார்.
2005-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்திற்காக மாணவர்களின் கற்றல் உத்திகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட இவர், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டிற்கான வளமை நூல்களை உருவாக்கி வெளியிட்டதோடு கற்றல் கற்பித்தல் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு அனைத்துலக மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். மாணவரின் எழுத்துத்திறன் மேம்பாடு தொடர்பான உத்திமுறைகளை ஆராய்வதிலும் தமிழ்மொழியை வீட்டுமொழியாகக்கொண்டில்லாத மாணவரின் மொழித்திறன் வளர்ச்சியை ஆராய்வதிலும் இவருக்கு ஈடுபாடு உள்ளது. மாணவர் நிலையறிந்து கற்பித்தலை உள்ளார்ந்து மேற்கொண்டு, தனக்கென்ற ஒரு தனித்துவமிக்க அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு திகழ்பவரே ஒரு முன்மாதிரி ஆசிரியராவார் என்பது இவரின் நம்பிக்கையாகும்.